×

கொடநாடு வழக்கு சூடுபிடிக்கிறது ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சாவு குறித்து மறுவிசாரணை: கொலை என மனைவி கூறியதால் தனிப்படை தீவிரம்

சேலம்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான பங்களாவில் நடந்த ெகாலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சயான் போலீசாரிடம் அளித்த மறுவாக்குமூலத்தில் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்களை கூறியதாக தெரிகிறது. இதனால் கொடநாடு வழக்கில், ஆரம்ப கட்டத்தில் இருந்து ஊட்டி போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். தற்போது அவரது  அண்ணன் தனபால் அளித்த வாக்குமூலத்தில் தனது தம்பி விபத்தில் இறக்கவில்லை, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதே போல் கனகராஜின் மனைவி கலைவாணியும், தனது கணவர் விபத்தில் பலியாகவில்லை, அவரை கொலை செய்து விட்டனர் என்று கூறினார். ஏற்கனவே கனகராஜ் விபத்து வழக்கு, ஆத்தூர் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் கனகராஜின் மனைவி கலைவாணியும், அண்ணன் தனபாலும் அளித்த வாக்குமூலத்தையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார், கனகராஜ் விபத்து வழக்கையும் மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் சேலம் வந்து, கனகராஜின் விபத்து வழக்கை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விசாரிக்க உள்ளனர். பிஜின்குட்டி, சதீஷனிடம் 8 மணி நேரம் விசாரணைகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான பிஜின்குட்டி, சதீஷன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, நேற்று இருவரும் ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, நீலகிரி எஸ்பி ஆசிஷ் ராவத் தலைமையிலான போலீசார் அவர்களிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்….

The post கொடநாடு வழக்கு சூடுபிடிக்கிறது ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சாவு குறித்து மறுவிசாரணை: கொலை என மனைவி கூறியதால் தனிப்படை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Jayalalithah ,Kanakaraj Chau ,Salem ,Nilgiri district, ,Kotakiri ,Sasigala ,Kanakaraj Saavu ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...